
அமைச்சர்கள்-துணை அமைச்சர்களின் அலுவலகங்களைச் சீரமைக்கக் கடந்த 2020ஆம் ஆண்டுத் தொடங்கித் தற்போது வரை 40 லட்சம் வெள்ளி க்கு மேல் அரசு செலவழித்திருப்பதாக பிரதமர் துறை அமைச்சர், டத்தோ டாக்டர் அப்துல் லத்தீப் அகமட் தெரிவித்தார். இதில் மிகப் பெரியத் தொகையாக 11 லட்சம் வெள்ளியை பிரதமர் துறை செலவழித்துள்ள வேளையில், அதனைத் தொடர்ந்து ஒற்றுமைத் துறை அமைச்சு 5 லட்சத்து 89,618 வெள்ளி மற்றும் உள்நாட்டு வாணிபப் பயனீட்டாளர் விவகார அமைச்சு .4 லட்சத்து 25,135 வெள்ளியை செலவழித்துள்ளது. கடந்த 2020, 2021ஆம் ஆண்டு முழுவதும் 14 அமைச்சுகள்/இலாகாக்கள் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டன. அவற்றின் மொத்தச் செலவு 40 லட்ச வெற்றியாகும் என்றார்.



