27.5 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

கழுத்தை நெரித்து மகனைக் கொன்ற தந்தை மீது கொலை குற்றச்சாட்டு

🔥 Views : 7
👁 Reading Now : 60

வீட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடர்பில் ஏற்பட்ட சண்டையில் மகனை கழுத்து நெரித்துக் கொன்ற இந்தியத் தந்தை மீது சிலாங்கூர் கோலகுபு பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது. கடந்த நவம்பர் 3 ஆம் தேதி உலு பெர்னாம் தாமான் பெர்னாம் ஜெயாவில் காலை 11 மணியிலிருந்து 11 .30 மணிக்குள் நிகழ்ந்த இச்சம்பவத்தில் கே.அப்பாச்நாயுடு என்ற தமது 37 வயது மகனை கொன்றதாக 72 வயது தந்தை எஸ்.கிருஷ்ணனுக்கு எதிராக குற்றம் வாசிக்கப்பட்டது. இது உயர்நீதிமன்றம் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் எந்தவொரு ஒப்புதல் வாக்கு மூலமும் பதிவு செய்யப்படவில்லை. இவ்வழக்கு மீண்டும் டிசம்பர் 22 -ஆம் தேதி செவிமடுக்கப்படும். இவருக்கு ஜாமீனும் வழங்கப்படவில்லை.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles