
அட்லி ஸாஹாரி மாநில முதல்வருக்கான வேட்பாளராகத் தேர்வுச் செய்வதன் மூலம் பக்கத்தானைச் சரியானத் தடத்திற்குக் கொண்டுச் செல்ல முடியும் என்று ஜசெக தலைமைச் செயலாளர், லிம் குவான் எங் நம்பிக்கைத் தெரிவித்தார். இவரின் தேர்வு மக்களின் எண்ணங்களுக்கு ஈடாகவும் அமைந்துள்ளது. இதில் அட்லியை எர்ராளமானோர் ஏற்றுக் கொள்வர்கள் என்று பக்கத்தானும் ஜசெகவும் நம்புகின்றன, அட்லி மக்களுடன் நட்பாகப் பழகக்கூடியவர் மட்டுமின்றி மிகவும் சுத்தமானவர், நேர்மையானவர் என்றார் அவர்.



