
பெட்டாலிங் ஜெயாவில் மூளை வளர்ச்சி குன்றியவர்களை பராமரித்து வரும் மூளை வளர்ச்சி குன்றிய சமூகநல இல்லத்திற்கு நாட்டில் புகழ்பெற்ற 100 பிளஸ் எஃப் அண்ட் என் குளிர்பான நிறுவனம் உதவிக்கரம் நீட்டியுள்ளது. உடலுக்கு சத்துணவை ஊட்டும் வகையில் சத்துணவு பால் மாவு பானங்களை அந்நிறுவனம் வழங்கி உதவி புரிந்துள்ளது. இந்த இல்லத்தில் ஆண் பெண் உட்பட 150 பேர் தங்கியுள்ளனர். மலேசியா சிலம்ப கழகத்தின் தேசிய உதவித் தலைவரும் கூட்டரசு பிரதேச மாநில சிலம்ப கழகத்தின் தலைவருமான டாக்டர் ஆர் டி உதயகுமார் மற்றும் மலேசிய சிலம்பக் கழகத்தின் நிர்வாக செயலாளர் வி.எம். குணசேகரன் ஏற்பாட்டில் இந்த இல்லத்திற்கு ஊட்டச்சத்து நிறைந்த குளிர்பானங்கள் கிடைக்கப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.



