28.4 C
Kuala Lumpur
Monday, September 21, 2026

Vetri

கத்தியால் குத்தப்பட்டு ஆடவர் மரணம் 16 பேர் கைது

🔥 Views : 48
👁 Reading Now : 68

பண்டார் புக்கிட் திங்கி 2இல் கடந்த சனிக்கிழமையன்று கத்தியால் குத்தப்பட்டு ஆடவர் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குண்டர் கும்பலைச் சேர்ந்த 16 பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இச்சம்பவத்திற்குத் தீர்வுக் காணப்பட்டு விட்டதாக சிலாங்கூர் மாநிலக் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர், எஸ்.ஏ.சி. நிக் எசானி முகமட் ஃபைசால் தெரிவித்தார். இச்சம்பவத்தில் கிள்ளான் பள்ளத்தாக்கில் ஸ்ரீ பெட்டாலிங் உட்பட ஜோகூரின் மூவார் மற்றும் லெடாங்கில் 2 பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யபட்டவர்களின் எண்ணிக்கைத் தற்போது 16 பேராக உள்ளது. சம்பவத்தின் போது 6 பேர் நிகழ்விடத்தில் இருந்தது தெரிய வந்துள்ளது. அதனால் இவர்கள்தான் இந்த காரியத்தைச் செய்திருக்ககூடும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles