29 C
Kuala Lumpur
Wednesday, September 30, 2026

Vetri

அதிவேகத்தில் ரூ. 200 கோடி வசூல்: அண்ணாத்த மேலும் ஒரு சாதனை

🔥 Views : 45
👁 Reading Now : 57

2021ஆம் ஆண்டில் வெளியான படங்களில் அதிவேகமாக 200 கோடி ரூபாய் வசூல் செய்த படம் என்கிற பெருமையை பெற்றிருக்கிறது அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளி பண்டிகை அன்று வெளியான அண்ணாத்த படம் பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தியேட்டர்களில் ரிலீஸான நான்கே நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ. 100 கோடி வசூலித்தது அண்ணாத்த. இதன் மூலம் தமிழகத்தில் வேகமாக ரூ. 100 கோடி வசூலித்த படம் என்று அண்ணாத்த புது சாதனை படைத்தது. இதையடுத்து இந்த ஆண்டு வேகமாக ரூ. 200 கோடி கிளப்பில் சேர்ந்த படம் என்கிற மற்றொரு சாதனையும் படைத்திருக்கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles