
நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிக்கும் பட்சத்தில் சரவா மாநில தேர்தல் ஒத்திவைக்கப்படுவதை வரவேற்பதாக எதிர்க் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். மக்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார தொடர்பான அம்சங்களை உள்ளடக்கியுள்ளதால் இவ்விவகாரத்தை தரவுகள் மற்றும் அறிவியல் ரீதியாக ஆராய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மலாக்காவில் செய்த தவற்றை மீண்டும் செய்யாதீர்கள். மாநில ஆளுனர் அம்னோவுக்கு ஆலோசனை வழங்கிய போதிலும் அதனை அந்த கட்சி பொருட்படுத்தவில்லை என்று அவர் சாடினார்.



