34.8 C
Kuala Lumpur
Tuesday, September 29, 2026

Vetri

கெஅடிலான் சார்பில் இரு இளம் வேட்பாளர்கள் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் வரவேற்பு

🔥 Views : 33
👁 Reading Now : 34

மலாக்கா மாநில தேர்தலில் இரு இளம் வேட்பாளர்களை கெஅடிலான் கட்சி களமிறக்கியுள்ளது பாராட்டுக்குரியது என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி தெரிவித்தார். கெஅடிலான் கட்சியின் இந்த முடிவு இளம் தலைமுறையினரின் குரலுக்கு செவிசாய்ப்பதை புலப்படுத்துதாக உள்ளது. 21 வயதான மலாக்கா மாநில கெஅடிலான் மகளிர் பிரிவு தலைவி ஃபர்ஸானா ஹயானி முகமது நாசீர் மற்றும் 27 வயதான மலாக்கா மாநில கெஅடிலான் இளைஞர் பிரிவு தலைவர் பிரசாந்த் குமார் பிரகாசம் ஆகியோரை பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது. இது இளம் தலைமுறையினர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி குறிப்பிட்டார். இவர்களை ஆதரித்து டத்தோஸ்ரீ அமிருடின் சாரி பிரச்சாரம் செய்து வருகிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles