29 C
Kuala Lumpur
Thursday, July 16, 2026

Vetri

சிலாங்கூர் புத்தக விழாவில் அதிர்ஷ்ட குலுக்கலில் 50,00 வெள்ளி வெகுமதி

🔥 Views : 18
👁 Reading Now : 64

டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் சிலாங்கூர் மாநில புத்தக விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வோருக்கு அதிர்ஷ்ட குலுக்கின் வழி 50,000 வெள்ளி வரை பரிசை வெற்றி கொள்ள வாய்ப்பு உள்ளது. புத்தகம் வாங்குவோர் தினசரி 500 வெள்ளியை ரொக்கப் பரிசாக வெற்றி கொள்வதற்குரிய வாய்ப்பு வழங்கப்படுவதாக சிலாங்கூர் பொது நூலக கழகத்தின் இயக்குநர் டத்தின் படுகா மஸ்துரா முகமது கூறினார். புத்தகங்களை வாங்குவோருக்கு நாங்கள் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. மாறாக, அவர்கள் அங்கு வழங்கப்படும் பாரத்தில் இவ்விழாவில் தாங்கள் செய்த செலவு தொடர்பான விபரங்களை எழுதி அதிர்ஷடக் குலுக்கு பெட்டியில் போட்டால் போதுமானது என்று அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles