
சிலாங்கூர் மாநில செந்தோசா சட்டமன்ற தொகுதி ஆதரவில் சிலாங்கூர் மாநில ஜூனியர் சூப்பர் சிங்கர் பாடல் திறன் போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 14ஆம் தேதி கிள்ளான் டேவான் ஹம்சா மண்டபத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தலைமையில் நடைபெறும் மாபெரும் சிலாங்கூர் ஜூனியர் சூப்பர் சிங்கர் பாடல் திறன் இறுதி சுற்றில் 14,000 வெள்ளி வெகுமதியை தட்டிச்சென்ற போட்டியாளர்கள் களம் இறங்குகிறார்கள்.
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி சிறப்பு வருகை புரிந்து வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்க வழங்க உள்ளார்.
இளம் பாடர்களை உருவாக்கும் படத்தில் இந்தப் போட்டி மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மொத்தம் 112 போட்டியாளர்கள் பங்கேற்ற பாடல் திறன் இறுதி சுற்றுக்கு 10 பேர் தேர்வு பெற்றிருக்கிறார்கள்.
Arogya ATV Link வழி மாபெரும் சிலாங்கூர் ஜூனியர் சூப்பர் சிங்கர் பாடல் திறன் போட்டியை இணையம் வழி கண்டு மகிழலாம்.



