
இப்போது தொடங்கி அடுத்தாண்டு ஜூலை மாதம் வரையிலானக் கால கட்டத்தில் கட்சித் தாவல் சட்டம் உட்பட கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்படும் என்று பிரதமர் துறையின் நாடாளுமன்றம் மற்றும் சட்டத்துறை அமைச்சர், டத்தோஸ்ரீ வான் ஜுனாய்டி தெரிவித்தார். இச்சட்டத் திருத்தத்தில் பிரதமருக்கானப் பதவிக் காலத்தை வரையறுப்பதும் அடங்கும். இதை நம்பிக்கையை மீட்டெடுக்கும் ஒப்பந்தத்தை வரும் ஜூலை மாதத்தில் நடைபெறவிருக்கும் கூட்டத்திற்கு முன்பு நான் தாக்கல் செய்ய வேண்டும் என்றார் அவர்.



