
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலை மீரா கட்சி உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது. மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாட்டில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று மீரா கட்சியின் தலைவர் கே.பி. சாமி தெரிவித்தார். அதேசமயம் தற்போது பல அரசியல்வாதிகளின் பார்வை எங்கள் பக்கம் திரும்பியுள்ளது. மீரா கட்சி நாடு தழுவிய அளவில் புதிய கிளைகளை அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் மீண்டும் பல புதிய கிளைகள் அமைக்கப்படும் என்றார் அவர். இந்நிலையில் மீரா கட்சி புதிய அரசியல் வியூகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.



