
பெரிக்கத்தான் நேஷனல் மற்றும் தேசிய முன்னணிக்கு இடையே கடுமையான சண்டை நடந்து கொண்டிருக்கிறது. பெர்சத்து கட்சி உச்ச மன்ற உறுப்பினர் அஸ்மின் அலி அதில் கவனம் செலுத்தட்டும். கெஅடிலான் கட்சி உள் விவகாரங்களில் அவர் மூக்கை நுழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் கெஅடிலான் தேசியத் பொருளாளர் லீ சுவான் சூங் பதிலடி கொடுத்திருக்கிறார். மலாக்கா மாச்சாப் சட்டமன்ற உறுப்பினர் கென்னி லிம் மீண்டும் வேட்பாளராக நியமிக்கப்படாத குறித்து அஸ்மின் அலி கேள்வி எழுப்பியுள்ளார். யார் வேட்பாளர் என்பதை கட்சி முடிவு செய்கிறது. இதில் தலையிட உங்களுக்கு உரிமை இல்லை என்று அஸ்மின் அலியை அவர் கடுமையாக சாடியுள்ளார். இதனிடையே மாச்சாப் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கென்னி லிம் நான் தொடர்ந்து பக்கத்தான் ஹரப்பானுக்கு முழு ஆதரவு வழங்குவேன். மலாக்காவில் மீண்டும் பக்கத்தான் ஹரப்பான் வெற்றிக்கு டத்தோஸ்ரீ அன்வாருடன் இணைந்து தீவிர பிரச்சாரம் செய்துவருவதாக குறிப்பிட்டுள்ளார்.



