
அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெறும் ஏஎப்சி இளையோர் கிண்ண கால்பந்து போட்டியில் பங்கேற்கும் மலேசிய இளையோர் கால்பந்து குழுவின் நிர்வாகியாக கிறிஸ்டோபர் நியமிக்கப்பட்டுள்ளார். மலேசிய கால்பந்து சங்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ அமிடின் தலைமையில் நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. . இந்தப் போட்டிக்கான ஆட்டக்காரர்கள் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் வேளையில் ஏஎப்சி இளையோர் கிண்ணத்தை வெல்ல மலேசியா உறுதிபூண்டுள்ளது நிர்வாகி கிறிஸ்டோபர் தெரிவித்தார். இதனிடையே மலேசிய இளையோர் கால்பந்து குழுவின் நிர்வாகியாக தம்மை நியமித்த மலேசிய கால்பந்து சங்கத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக எஃப் ஏ எம் ஆட்சிக்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் குறிப்பிட்டார்.



