27.3 C
Kuala Lumpur
Tuesday, August 25, 2026

Vetri

‘SPRM lawan rasuah Atau sokong’ rasuah டத்தோஸ்ரீ அன்வார் ஆவேசம்!

🔥 Views : 33
👁 Reading Now : 29

மித்ரா நிதி ஒதுக்கீடு முறைக்கேடு விவகாரத்தில் ஊழல் தடுப்பு ஆணையம் ஊழழை எதிர்த்து போராடுவதா அல்லது ஊழலுக்கு ஆதரவு தருகிறதா என்று பக்கத்தான் ஹரப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆவேசமாக கேள்வியை எழுப்பியுள்ளார். மித்ரா நிதி ஒதுக்கீடு மோசடி தொடர்பில் ஊழல் தடுப்பு ஆணையம் விசாரித்து வருகிறது என்ற காரணத்தை சொல்லி, நாடாளுமன்றத்தில் எழுப்பபடும் எந்த கேள்விகளுக்கும் ஒற்றுமை துறை அமைச்சர் ஹலிமா பதில் சொல்வதில்லை. நாடாளுமன்றத்தில் இருப்பவர்கள் மக்கள் பிரதிநிதிகள். மக்கள் சார்பாக தான் நாங்கள் கேள்வி எழுப்புகிறோம். ஆனால், எங்களுக்கு முறையான பதில் கிடைப்பதில்லை. நாட்டில் நிகழும் நிதி முறைக்கேட்டை எம்ஏசிசி விசாரித்து வருகிறது. ஆனால், அந்த நிலவரங்கள் குறித்து அறியும் உரிமை மக்கள் பிரதிநிதிகளுக்கு உண்டு. மித்ரா மட்டுமின்றி, அனைத்து நிதி முறைக்கேடு விவகாரங்கள் தொடர்பிலும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். நாடாளுமன்றத்தை விட macc -சிக்கு அதிக அதிகாரம் உள்ளதா? அல்லது பதிலளிக்கும் தரப்பினரை macc கட்டுப்படுத்துகிறா? என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles