
முன்னாள் பிரதமர், டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்குப் பரிசாக 10 கோடி வெள்ளி மதிப்புள்ள வீடு, நிலம், சொத்து வழங்குவது தொடர்பில் நேற்று 10க்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியடைந்ததால் நாடாளுமன்றம் பரபரப்பானது. இவ்விவகாரத்தை எழுப்பிய லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தற்போது டத்தோஸ்ரீ நஜீப் ஒரு கைதி, ஓர் ஊழல்வாதியாக இருப்பதால் அரசின் பணத்தை அவரிடம் கொடுப்பதால் கிடைக்கும் பலன் குறித்து விளக்கமளிக்கும்படி கேட்டுக் கொண்டார். , நஜீப் ஒரு கைதியாக இருப்பதால் அவரது சேவைதான் என்ன என்று மகாதீர் கேள்வி எழுப்பினார். நான் 22 ஆண்டுகள் பிரதமராக இருந்தேன். ஒரு துண்டு நிலத்தை கூட எடுத்துக் கொள்ளவில்லை. Pencen மட்டுமே எனக்கு கிடைக்கிறது என்று அவர் சொன்னார்.



