
ஏழை இந்திய சமுதாயத்திற்கு சேரவேண்டிய மித்ரா நிதி முறைகேட்டில் ம.இ.கா தலைவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனரா என பக்கத்தான் ஹராப்பான் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் எஸ் ராயர் நேற்று மீண்டும் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். மித்ரா நிதி ஒதுக்கீடு மோசடி தொடர்பில் எம்ஏசிசி விசாரணை நடத்தி வருவதால் இது குறித்து தாம் பதில் அளிக்க முடியாது என ஒற்றுமை துறை அமைச்சர் ஹலிமா கூறியிருப்பதை அவர் சாடினார். இது மிக முக்கியமான விவகாரம். இதில் ம இகா தலைவர்கள் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள் என்று அவர் மீண்டும் கேள்வியை எழுப்பினார்.



