
பினாங்கில் நான்கு இலக்க எண் கடைகளுடன் பினாங்கு முப்தியைத் தொடர்புப்படுத்திப் பேசியதற்காக மன்னிப்புக் கோரினார் கெடா மந்திர் பெசார், முகமட் சனுசி மாட் நோர். நான் பல்கலைக்கழகத்தில் உயர்கல்விப் பயின்ற போது அங்கு விரிவுரையாளராக பினாங்கு முப்தி பணியாற்றியிருப்பதால் அவரது அறிவுரையை நான் ஏற்றுக் கொள்கிறேன். இதற்காக இந்த அறிக்கையின் வழி பினாங்கை நான் இழிவுப்படுத்துவதாக அர்த்தமில்லை. ஒருவேளை மனதைப் புண்படுத்தியிருப்பதாக நீங்கள் கருதினால் என்னை மன்னித்து விடுங்கள் என்றார்.



