
தலைநகரில் 10 வெள்ளி கோடி மதிப்புள்ள சொத்துடமை வீட்டை வாங்குவதற்காக முன்னாள் பிரதமர், டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிடமிருந்து விண்ணப்பத்தை அமைச்சரவைப் பெற்றதை நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஸப்ருல் உறுதிப்படுத்தினார். இருந்த போதிலும் 10 வெள்ளி கோடி மதிப்புள்ள இந்த வீடு மற்றும் சொத்துடமைச் சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள் 2022ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டப் பிறகுதான் விண்ணப்பிக்கப்பட்டதால் அதை பட்ஜெட்டில் உட்படுத்த முடியவில்லை. விண்ணப்பம் செய்யப்பட்டு விவாதமும் நடத்தப்பட்டு விட்டதால் இப்போது அமைச்சரவையின் இறுதி முடிவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.



