31.4 C
Kuala Lumpur
Thursday, July 16, 2026

Vetri

டத்தோஸ்ரீ அன்வாருக்கு பதில் மாற்றுத் தலைவர் யார்?

🔥 Views : 15
👁 Reading Now : 54

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பதிலாக பக்கத்தான் ஹரப்பானுக்கு ஒரு மாற்று தலைவரை அறிவிக்கும் படி, ஜசெக பிலூட் சட்டமன்ற உறுப்பினர் லீ சின் சென்னுக்ககு கெஅடிலான் இளைஞர் பிரிவு உதவித் தலைவர் தீபன் சுப்பிரமணியம் சவால் விடுத்துள்ளார். விரல் நீட்டி, அன்வாரைப் பதவி விலகுமாறு வற்புறுத்தும் லீயின் நோக்கம் என்ன? டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், அமானா தலைவர் முகமட் சாபு ஆகியோரையும் பிஎச் தலைமையிலிருந்து விலகுமாறும் லீ வலியுறுத்துவாரா என்று அவர் கேள்வி எழுப்பினார். ஒரு மாநிலத் தேர்தலை இழந்தது பக்கத்தான் ஹரப்பானை அச்சுறுத்துகிறது என்றார் அவர். பிகேஆர் இல்லாமல் ஒரு புதியக் கூட்டணியை உருவாக்கும் திட்டம் இருப்பது போல் தெரிகிறது. ஜசெக தலைமை அதைத்தான் விரும்புகிறது என்றால், அவர்கள் பிகேஆரை பக்கத்தான் ஹரப்பானில் இருந்து அகற்றலாம் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles