
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் கண்ட தோல்வியால் பக்கத்தான் தலைவர் பதவியில் இருந்து டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விலக வேண்டும் என்ற பிரச்சாரம் பக்கத்தானின் ஒற்றுமை உணர்வை பிரதிபலிக்கவில்லை என்று பேரா மாநில கெஅடிலான் தலைவர் பார்சா வாபா சல்வாடோர் அறிவித்தார். மலாக்காவில் கண்ட தோல்வியை ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த தோல்வியில் இருந்து நாம் மீட்சி பெற பாடுபடுவோம் என்று அவர் கேட்டுக் கொண்டார். அதேசமயம் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை பதவி விலகும் படி வலியுறுத்துவது முறையல்ல என்று அவர் சொன்னார்.



