
நாட்டில் கடந்த இரண்டு வாரங்களாக காய்கறி விலைகள் 200 விழுக்காடு உயர்ந்திருக்கிறது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் மொகிதீன் அப்துல் காடீர் கடேர் தெரிவித்தார். கடுகு கீரை கிலோ 3 வெள்ளியில் இருந்து 9 வெற்றியாக உயர்ந்துள்ளது. சிவப்பு மிளகாய் கிலோ 13 வெள்ளியில் இருந்து 19 வெற்றியாக உயர் கண்டுள்ளது. பச்சை மிளகாய், பீன்ஸ், பயிற்றாங்காய், கோபிஸ் உட்பட அனைத்து வகை காய்கறிகளும் மிகப்பெரிய அளவில் விலையேற்றம் கண்டிப்பதாக அவர் எச்சரித்தார்.



