34.7 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

15ஆவது பொதுத் தேர்தல் எப்போது? அமைச்சரவை தான் முடிவு செய்யும் அரசியல் கட்சி அல்ல?

🔥 Views : 7
👁 Reading Now : 26

நாட்டின் 15 ஆவது பொதுத்தேர்தல் எப்போது என்பதை அமைச்சரவை தான் முடிவு செய்யும் தவிர அரசியல் கட்சி அல்ல என்று பாஸ் கட்சி தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ தக்குயூடின் பதிலடி கொடுத்திருக்கிறார். நாடு தற்போது நோய்தொற்று தாக்கத்தில் இருக்கிறது. அந்த வகையில் எப்போது பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து கூட்டரசு சட்டத்திற்கு ஏற்ப அமைச்சரவை முடிவு செய்யும். பொதுத் தேர்தல் நடத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகள் முடிவு செய்யாது என்று அவர் சொன்னார். மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து விரைந்து பொதுத்தேர்தலை நடத்தும் படி பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை அம்னோ துணை தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles