
மித்ரா நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் பத்து நிறுவனங்கள் மீது விரைவில் குற்றஞ்சாட்டப்படும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அறிவித்துள்ளது. 10 நிறுவனங்களின் விசாரணை கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக அது தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய துணை அரசு வழக்கறிஞரிடம் பரிந்துரைப்போவதாக அதன் தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.



