
நாட்டிலுள்ள 12 முதல் 17 வயது வரையிலான 26 லட்சத்து 3 ஆயிரத்து 148 பேர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 27 லட்சத்து 60 ஆயிரத்து 656 இளையோர்கள் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றனர். இதனிடையே, பெரியவர்களில் 2 கோடியே 24 லட்சத்து 25 ஆயிரத்து 264 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற வேளையில் 2 கோடியே 29 லட்சத்து 36 ஆயிரத்து 203 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
