
நாட்டில் தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிராக எதிராக மூன்று மலாய் அமைப்புக்கள் தொடுத்து வழக்கு மீது தீர்ப்பு டிசம்பர் 29 அம் தேதி தீர்ப்பு கூறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்ப்பள்ளிகள், சீனப் பள்ளிகளில் தமிழ் மற்றும் மாண்டரின் மொழிகள் போதனை மொழியாக பயன்படுத்துவதை தடைவிதிக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என அந்த மூன்று தரப்புக்களும் வழக்குத் தொடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அரசாங்கம் , கல்வி அமைச்சு சார்பில் ஆஜரான மூத்த கூட்டரசு வழக்கறிஞர் நற்குணவதி சுந்தரசேன், மலேசிய சீன மொழி மன்றத்தை பிரதிநிதித்து வாதடிய வழக்கறிஞர் டத்தோஸ்ரீ கோபால் ஸ்ரீராம் ஆகியோர் நேற்று வாதத் தொகுப்பை சமர்ப்பித்தனர். இரண்டு தரப்பு வாதத் தொகுப்பை செவிமடுத்த பின்னர் டிசம்பர் 29ஆம்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி முகமட் நஸ்லான் தெரிவித்தார்.
