
வரும் ஜூன் மாதத்தில் சிலாங்கூர் மாநில மக்களுக்கு தடுப்பூசி விநியோகம் செய்யப்படும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி நம்பிக்கைத் தெரிவித்தார்.
தடுப்பூசி உற்பத்தியை கொள்முதல் செய்வது தொடர்பான ஒப்பந்தத்தை மாநில அரசு சம்பந்தப்பட்ட மருந்து உற்பத்தியாளருடன் இறுதி செய்தவுடன் அதன் விநியோகம் தொடர்பில் பொது மக்களுக்கு அறிவிக்கப்படும்.
அந்த தடுப்பூசி கொள்முதல் தொடர்பிலான ஒப்பந்தங்களை ஆய்வு செய்யும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன.
அதனை பொதுமக்களுக்கு விநியோகிக்கும் பணி வரும் ஜூன் மாதம் மேற்கொள்ளப்படலாம்.
சிலாங்கூர் மாநிலத்தில் நோய்த்தொற்றை குறைப்பதற்கு மாநில அரசாங்கம் தொடர்ந்து போராடி வருகிறது என்று அவர் சொன்னார்



