
சிலாங்கூர் மாநில அரசாங்கம் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 56 சட்டமன்ற தொகுதிகளில் இலவசமாக கோவிட் 19 மருத்துவப் பரிசோதனையை நடத்தி வருகிறது.
சிலாங்கூர் மாநில மக்கள் இந்த இலவச மருத்துவ பரிசோதனையை நல்ல முறையில் பயன்படுத்தி பயன் அடையும்படி செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜோர்ஜ் குணராஜ் கேட்டுக்கொண்டார்.

சிலாங்கூர் மாநில மக்கள் பாதுகாப்புடன் நோய்த் தொற்று இல்லாமல் இருப்பதை உறுதிபடுத்த மாநில அரசாங்கம் இந்த இலவச மருத்துவ பரிசோதனையை நடத்திக் கொண்டிருக்கிறது.
ஆகவே மாநில மக்கள் காலம் கடத்தாமல் தங்கள் பகுதியில் நடத்தப்படும் இலவச மருத்துவப் பரிசோதனையில் கலந்து கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
