32.9 C
Kuala Lumpur
Wednesday, July 15, 2026

Vetri

பினாங்கு புக்கிட் தெங்கா ஸ்ரீ மங்கள நாயகி அம்மன் ஆலயம் தற்காலிக செயற்குழு அமைந்தது

🔥 Views : 52
👁 Reading Now : 34

மத்திய செபராங் பிறை புக்கிட் தெங்காவில் அமைந்துள்ள ஸ்ரீ மங்கள நாயகி
அம்மன் ஆலயத்தில்,பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் கீழ்
தற்காலிக செயற்குழு அமைக்கப்பட்டது.
அண்மையில் பினாங்கு
உயர்நீதிமன்றத்தின் சாதகமான தீர்ப்புக்குப் பிறகு,15 பேர் கொண்ட இந்த தற்காலிக செயற்குழுவை அமைத்ததாக பினாங்கு இந்து அறப்பணி
வாரியத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ இராமச்சந்திரன் முத்தையா
தெரிவித்தார்.
இதன் முதல் கட்டப் பணியாக இடையிலேயே நின்று விட்ட ஆலயத்தின் திருப்பணியை சுமார் 5 லட்சம் வெள்ளி செலவில் இன்னும்
மூன்று மாதத்தில் நிறைவு செய்திட
தற்காலிக செயற்குழுவை கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.
அனைத்துப் பணிகளிலும் சுமூகமாக முடிந்தப் பிறகு,இவ்வாண்டு
இறுதிக்குள் ஸ்ரீ மங்கள நாயகி அம்மன் ஆலய கும்பாபிஷேகத்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுமென அவர் கூறினார்.
மேலும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும்,ஆலய சொத்துக்களான நிலப்பிரச்னைகள் உட்பட ஆலயம் சம்பந்தமான மற்ற விவகாரங்களுக்கும் உரிய தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் விவரித்தார்.
நீதிமன்ற தீர்ப்பின் வெற்றிக்குப் பிறகு முதன் முறையாக அரசுசாரா இயக்கங்கள்,தற்காலிக செயற்குழுவினருடன் டத்தோ இராமச்சந்திரன் முத்தையா சந்திப்பு நடத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles