30.6 C
Kuala Lumpur
Friday, September 18, 2026

Vetri

தோல்வி கண்ட அரசாங்கம்
இளைஞர்கள் கைது!
டத்தோஸ்ரீ அன்வார் வேதனை!

🔥 Views : 51
👁 Reading Now : 43
File Picture

தோல்வி கண்ட அரசாங்கம் என்ற பேனரை ஏந்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
நாடாளுமன்றத் கட்டடத்தின் முன் கூடி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்திய இளைஞர்கள் மீதும் நெருக்குதல் கொடுப்பது வேதனையளிக்கிறது. தற்போதைய அரசாங்கம் தோல்வி கண்டிருக்கிறது என்பது இந்த எதிர்ப்பு மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று அவர் சொன்னார்.
கடந்த வாரம் பத்து பஹாட்டில் ஒன்று கூடிய இளைஞர்கள் தோல்வி கண்ட அரசாங்கம் என்ற பேனரை ஏந்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் 27 இளைஞர்கள் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles