28.5 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

பார்வையற்ற 30 குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள்

🔥 Views : 8
👁 Reading Now : 58

பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப்பின் மலேசிய குடும்பம் கொள்கை இளைஞர்களிடையே மேலோங்கச் செய்ய வேண்டிய கடமை எங்களுக்கும் உள்ளது என்று மாற்று திறனாளிகளோடு ஏற்றமிகு தீபத்திருநாள் நிகழ்வின் வரவேற்புரையில் பெர்கெராக்கான் பெலிய இன்ஸ்பிராசியின் துணைத் தலைவர் மோகன்ராஜ் வில்லவன் குறிப்பிட்டார். மூவின மக்கள் வாழும் இந்நாட்டில் இளைஞர்களிடம் மட்டுமல்லாது அனைத்து மக்களிடமும் ஒற்றுமையை வலுப்படுத்த அனைவருடைய பங்களிப்பும் மிகவும் அவசியம். அனைத்து சமுகத்தின் முன்னிலையில் மலேசிய குடும்பத்தின் நல்லிணக்கத்தை வழியுறுத்த நாங்கள் எங்களின் ஒவ்வொரு நிகழ்விலும் அதனை எங்களின் இளைஞர்களுக்கு வழிகாட்டி வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். பெர்கெராக்கான் பெலிய இன்ஸ்பிராசியின் ஏற்பாட்டில் மாற்று திறனாளிகளோடு ஏற்றமிகு தீபத்திருநாள் எனும் நிகழ்வின் வழி பார்வையற்ற 30 குடும்பங்களுக்கு அடிப்படை உணவுப் பொருட்கள் ருமா பிரிஹாத்தின் வாயிலாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு மட்டுமில்லாது பெர்கெராக்கான் பெலிய இன்ஸ்பிராசியின் அதிகமான நிகழ்வுகளுக்கு பெரும் ஆதரவை வழங்கும் ஜேவி கிரேட்டிவ் சொலுஷன் நிர்வாகி ஜானதிபன் பாலன், யாக்கின் எடாரான் நிர்வாகி மார்க் யோகராஜ் குணசேகர், சுரேஸ் நாகராஜு ஆகியோர்களுக்கு இந்நிகழ்வில் சிறப்பு செய்யப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles