33 C
Kuala Lumpur
Friday, April 17, 2026

Vetri

கம்போங் பாரு சுபாங் ரூமா பாஞ்சாங் வீடுகளை உடைக்க உள்ளதால் பரபரப்பு!

கம்போங் சுபாங் பாருவில் உள்ள ரூமா பாஞ்சாங் வீடுகளை ஒரு தரப்பினர் உடைக்க வந்ததால் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கம்போங் சுபாங் பூங்கா ராயாவில் வசித்து 100க்கும் மேற்பட்ட இந்திய குடும்பங்கள் கம்போங் சுபாங் ரூமா பாஞ்சாங் என்ற இடத்துக்கு இடம் மாற்றப்பட்டனர். 18 மாதங்கள் மட்டுமே இந்த ரூமா பஞ்சாங்கில் வாழுங்கள். பின்னர் உங்களுக்கு வீடுகள் கிடைக்கும் என்று அரசியல்வாதிகளின் பேச்சை நம்பி 27 ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் ரூமா பாஞ்சாங் நிலத்தின் உரிமையாளர் என்று கூறிக்கொள்ளும் தரப்பைச் சேர்ந்தவர் இன்று காலையில் வீடுகளை உழைக்க வந்த போது இங்கு கூடியிருக்கும் மக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் சிவராசா வின் சிறப்பு அதிகாரி நவின் மற்றும் வழக்கறிஞர் கங்காதரன் ஆகியோர் தலையிட்டு வீடுகள் உடைப்பதை தற்காலிகமாக தடுத்து நிறுத்தினர் என்று இங்கு வாழும் முத்து என்பவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles