26.7 C
Kuala Lumpur
Tuesday, September 29, 2026

Vetri

இன்றிரவு 2021 மலேசியக் கிண்ணத்தை வென்று வரலாறு படைக்கப் போவது யார்? கேஎல் சிட்டி – ஜெடிதி நேரடி பலப்பரீட்சை

🔥 Views : 28
👁 Reading Now : 68

இன்றிரவு நடக்கும் 2021 -ஆண்டு மலேசியக் கிண்ணப் போட்டி இறுதி ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளரான ஜோகூர் ஜேடிதி எப்சியும் ,32 ஆண்டுகள் காத்திருக்கும் கேஎல் சிட்டி எப்சியும் மோதவுள்ளன. .இந்த விறுவிறுப்பான ஆட்டம் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 8.45மணிக்கு புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நடைபெறும்.1989 ஆம் ஆண்டு கடைசியாக கே.எல். சிட்டி மலேசியக் கிண்ணத்தை வென்றது குரோஷியா நாட்டைச் சேர்ந்த பயிற்றுனர் போஜன் ஹோடக் தலைமையில் கே.எல். சிட்டி இம்முறை களமிறங்குகிறது. ஜொகூர் ஜேடிதி எப்சியை பொறுத்த வரையில் 2014 -ஆம் ஆண்டு தொடங்கி எட்டு முறை லீக் கிண்ணத்தை வென்றுள்ளது. மேலும் இன்று ஜெடிதி மலேசிய கிண்ணத்தை வாகை சூடினால் நாளை டிசம்பர் 1 ஆம் தேதி ஜொகூர் மாநிலத்திற்கு சிறப்பு விடுமுறை வழங்கப்படும் என்று ஜொகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஹஸ்னி முகமட் தெரிவித்துள்ளார். கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் மலேசியக் கிண்ணத்தை வெல்லப்போவது யாரென்று இன்றிரவு தெரிந்து விடும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles