
இந்நாட்டில் தாய்மொழி பள்ளிகளை அழிக்க நினைப்பது இனத்துவ ரீதியிலானது என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி சுட்டிக்காட்டினார். தாய்மொழி பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மலாய் மொழியில் சரளமாகப் பேச தெரியவில்லை மற்றும் புலமைப் பெற்றிருக்கவில்லை என்று பெர்சத்து கட்சி தகவல் பிரிவு தலைவர் குறிப்பது அடிப்படை இல்லாத ஒன்று. தற்போது நாட்டில் தாய்மொழி பள்ளிகளை கட்டம் கட்டமாக அகற்றும் வேலையில் சில தரப்பு ஈடுபட்டிருக்கிறது. தாய்மொழி பள்ளிகளை மூட வேண்டும் என்றும் சில அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்து வருவதும் நமக்கு நன்றாக தெரியும் என்று அவர் சாடியுள்ளார்.
