
பெர்சாத்து இளைஞர் தகவல் தலைவர் முகமட் அஷ்ரப் முஸ்தகிம் பத்ருல் முனீர், தாய்ப் மொழிப் பள்ளிகளை கட்டம் கட்டமாக ஒழிக்க வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை இரட்டிப்பாக்கியுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். தாய்மொழிப் பள்ளிகளை மூட வேண்டும் என்று கூறும் இவரது கூற்று இனவெறியை குறிக்கின்றது. மலேசியர்களிடையே மேலும் பிளவை உண்டாக்குகின்றது என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ சாடினார். தங்கள் கலாச்சார அடையாளத்தை இழந்துவிடுவோமோ என்ற பயத்தில் இருக்கும் சீனர்கள் மற்றும் இந்தியர்கள் மத்தியில் இம்மாதிரியான கோரிக்கை மேலும் அச்சத்தை அதிகரிக்கிறது.. மாற்று தீர்வுகளை யோசிப்போம். மறைமுகமாக இனவெறியை தூண்ட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
