
ஒமிக்ரோன் வைரஸ் தாக்கத்தால் அடுத்த ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்த சீன அரசு பல சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும் என்று சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. வரும் 2022ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீனாவில் நடைபெற உள்ளன. சீனாவின் ஹுபே மாநிலத்தில் வரும் பிப்ரவரி 4ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. கடைசியாக 2008ம் ஆண்டு சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
