34.6 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பினாங்கு சிலம்ப போர்கலைக் கழகம் உதவி

பினாங்கு தென் செபராங் பிறை மாவட்டத்திலுள்ள வசதிக் குறைந்த பி40 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 50 பேருக்கு பினாங்கு மாநில சிலம்ப போர்க்கலைக் கழகம் மற்றும் நிபோங் திபால் அறிவியல் பல்கலைக்கழக இந்திய மாணவர்களின் ஏற்பாட்டில் உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஜாவி சட்டமன்றத் தொகுதியில் உள்ள பைராம் தோட்டம், சங்காட் தோட்டம், ஜாவி தோட்டம், கிரியான் தோட்டம் மற்றும் நிபோங் திபால் தமிழ்ப்பள்ளி ஆகிய 5 பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளி தளவாடப் பொருட்களை வழங்கியதாக கழகத்தின் மாநிலத் தலைவர் மாஸ்டர் கவிக்குமார் இரவிச்சந்திரன் கூறினார். இதுவொரு சிறிய உதவியாக இருந்தாலும்,மாணவர்களுக்கு பயனான உதவியாக இருக்குமென அவர் கூறினார். இந்நிகழ்வில் மக்கள் சக்தி கட்சியின் பொறுப்பாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles