
ஒமிக்ரோன் என பெயரிடப்பட்டுள்ள புதிய வகை கோவிட்-19 நோய்த் தொற்று டெல்டா வகை தொற்றை விட விரைவாகப் பரவும் தன்மை கொண்டதாக கருதப்படுகிறது. எனினும், உருமாற்றம் கண்ட அந்த புதிய தொற்று எவ்வளவு கோரத்தன்மை கொண்டது என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார். தற்போதைக்கு நாம் செய்யக்கூடிய எல்லாம் முகக்கவசம் அணிவது, கூடல் இடைவெளியைக் கடைபிடிப்பது, சுத்தத்தை பேணுவது, நல்ல காற்றோட்டத்தை உறுதி செய்வது ஆகும் என்று அவர் சொன்னார்.
