29 C
Kuala Lumpur
Wednesday, July 15, 2026

Vetri

மலாய்க்காரர்கள், இந்தியர் ஆதரவு குறைந்ததால் மலாக்காவில் பக்கத்தான் தோல்வி காண நேரிட்டது

🔥 Views : 14
👁 Reading Now : 26

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் 5 இடங்களில் வெற்றி பெற்றது. தேசிய முன்னணி 21 இடங்களில் வெற்றி பெற்ற வேளையில் பெரிக்கத்தான் நேஷனல் 2 இடங்களில் வெற்றி பெற்றது. ஒட்டுமொத்தமாக பக்கத்தான் ஹரப்பான் 1 லட்சத்து 14 ஆயிரத்து 457 வாக்குகள் பெற்றது. தேசிய முன்னணிக்கு 1 லட்சத்து 22,741 வாக்குகள் பெற்றது. பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணிக்கு 77,731 வாக்குகள் கிடைத்தன. கடந்த தேர்தலில் பக்கத்தான் ஹரப்பானுக்கு 27.3 விழுக்காடு மலாய்க்காரர்கள் வாக்குகள் கிடைத்தன. ஆனால் இம்முறை 14.3 விழுக்காடு வாக்குகள் மட்டுமே கிடைத்தது. அதேசமயம் கடந்த பொதுத் தேர்தலில் 57 விழுக்காடு இந்தியர்கள் வாக்குகள் பக்கத்தான் ஹரப்பானுக்கு கிடைத்தது. ஆனால் இப்போது 47 விழுக்காடு மட்டுமே கிடைத்தது. 80 விழுக்காடு சீனர்கள் வாக்குகள் பக்கத்தான் ஹரப்பானுக்கு கிடைத்ததுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles