
பக்கத்தான் ஹராப்பானின் தலைவராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இருப்பது தொடர்பில் பகாங் மாநில ஜ.செ.க. மற்றும் பி.கே.ஆர். இடையே ஏற்பட்டத் தகராறு குறித்து அம்னோ உச்சமன்ற உறுப்பினர், ரஸ்லான் வருத்தம் தெரிவித்தார். இவ்விவகாரத்தில் அம்னோவைக் குற்றம் சாட்டி பக்கத்தானின் தகராற்றில் இழுக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
