33.1 C
Kuala Lumpur
Thursday, July 16, 2026

Vetri

20 நாடுகளில் 226 பேருக்கு ஒமிக்ரோன் வைரஸ் பாதிப்பு

🔥 Views : 20
👁 Reading Now : 31

கொரோனாவின் உருமாறிய வைரசான ஒமிக்ரோன் தென் ஆப்பிரிக்காவில் தோன்றி, இப்போது உலக நாடுகளில் எல்லாம் கால் தடம் பதிக்கத்தொடங்கி உள்ளது. இந்த வைரஸ் 50 உருமாற்றங்களை தன்னிடம் கொண்டிருப்பதால் மோசமான வைரஸ் என்று விஞ்ஞானிகள் உலக நாடுகளை எச்சரித்துள்ளனர். இந்த ஒமிக்ரோன் வைரஸ் தற்போது 20 நாடுகளில் 226 பேருக்கு கண்டு இருப்பதாக அமெரிக்க தொற்றுநோய் நிபுணர் ஆண்டனி பாசி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆண்டனி பாசி கூறுகையில் இது டெல்டா போன்ற பிற வகை வைரஸ்களில் இருந்து வித்தியாசமான உருமாற்றங்களை கொண்டுள்ளது என்றார். தற்போது இந்த புதிய வைரஸ் உலகை மிரட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles