31.2 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

1எம்டிபி ஊழல்: ஸெத்தி, முன்னாள் அமைச்சர்கள் மீதான ஐயம் இன்னமும் தொடர்கிறது

🔥 Views : 6
👁 Reading Now : 49

சீன நெடுஞ்சுவரைப் போல தொடர்ந்து கொண்டிருக்கும் 1எம்டிபி ஊழல் தொடர்பில், தேசிய வங்கியின் முன்னாள் ஆளுநர் ஸெத்தி அக்தார் அஸிஸ் மற்றும் முன்னாள் கேபினட் அமைச்சர் ஆகியோர் மீது எழுப்பப்படும் கேள்விகளும் ஐயமும் இன்னமும் தொடர்கின்றன. 1எம்டிபி நிதியில் இருந்து 700 மில்லியனை பெற்றதாக சொல்லப்படும் பிரிட்டிஷ் வர்ஜின் தீவைச் சேர்ந்த மார்னிங் ஸ்டார் ஈக்விட்டீஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய இருவரில் ஒருவரான ஷேக் அக்மால் ஷேக் அலாவுடீன் அந்த முன்னாள் அமைச்சரின் உறவுக்காரர் என்று சொல்லப்படுகிறது. அதைப்போல 1எம்டிபி நிதியின் ஒரு பகுதி ஸெத்தியின் கணவர் தௌஃபிக் ஐமானின் வங்கிக் கணக்கில் சென்றது தொடர்பில் எழும் கேள்விகளுக்கும் இன்றுவரை விடை கிடைக்கவில்லை என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினரான புவாட் ஜர்காஸி தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles