
பொதுப்பணித் துறையின் கண்காணிப்பிலும் பராமரிப்பிலும் உள்ள சாலை விளக்குகள், சாலை நடைபாதை, வடிகால் அமைப்பு உள்ளிட்ட உட்கட்டமைப்பை மேம்படுத்த நிதி அதிகரிக்கப்பட வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் நேற்று சட்டமன்றத்தில் உரையாற்றும்போது குறிப்பிட்டார். கால நிலை மாற்றம் மற்றும் பேரிடர் கால மேலாண்மையில் மாநில அரசு அக்கறைக் கொண்டிருப்பது பாராட்டுக்கு உரியது என்றார். அதைப்போல பொது சுகாதார மேம்பாட்டிலும் கல்வி வளர்ச்சியிலும் மாநில அரசு கொண்டுள்ள அக்கறை பாராட்டத்தக்கது என்று தன்னுடைய உரையில் அவர் குறிப்பிட்டார். வேகமாக வளர்ந்து வரும் செந்தோசா பகுதியில் பொது சந்தை, அல்-பராக்கா பள்ளிவாசல், காவல் நிலையம் போன்ற சிறந்த நிலையில் உருவாக வேண்டும். தோட்டத் தொழிலாளர்கள், குடியேற்றக்காரர்கள் ஆகிய தரப்பினரின் நிலப்பிரச்சினை சுமூகமாக தீர்த்துவைத்துள்ள மந்திரி பெசார், சிலாங்கூர் மாநிலத்தை வெற்றிப் பாதையில் பயணிக்க வைக்கிறார் என்றும் குணராஜ் தன்னுடைய உரையில் குறிப்பிட்டுள்ளார்.



