29 C
Kuala Lumpur
Wednesday, July 15, 2026

Vetri

உலகையே உலுக்கிய வரும் ஒமிக்ரோன் வைரஸ் 23 நாடுகளுக்கு மின்னல் வேகத்தில் பரவியது

🔥 Views : 21
👁 Reading Now : 68

தென் ஆப்ரிக்காவில் பரவிய ஒமிக்ரோன் வைரஸ் தற்போது உலகையே உலுக்கிய வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல், பிரிட்டன், நெதர்லாந்து, செக்குடியரசு உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது மின்னல் வேகத்தில் 23 நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும், அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் கூறுகையில் முதலில் 4 அல்லது 5 மண்டலங்களில் காணப்பட்ட இந்த வைரஸ் தற்போது 23 நாடுகளுக்கு பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எச்சரித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles