
வசதி குறைந்தவர்களின் வீட்டில் யாராவது இறந்துவிட்டால், அவர்களுக்கு இறுதிச் சடங்குக்கான செலவுகளை ஏற்றுக் கொண்டு உதவி புரிவோம் என்று மில்லேனியம் சிலாங்கூர் இயக்கத்தின் தலைவர் டத்தோ ஸ்ரீ கே.சரவணன் தெரிவித்தார். , அந்தக் குடும்பம் உண்மையாகவே வசதி குறைந்த குடும்பமா? என்று அடையாளம் கண்ட பிறகு அவ்வுதவியைச் செய்து வருகிறோம் என்று அவர் சொன்னார். இறுதிச் சடங்குக்கான இந்த உதவியை இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் மூன்று இனத்தவர்களுக்கும் செய்து வருகிறோம். மில்லேனியம் சிலாங்கூர் இயக்கம் தொடங்கி இரண்டு வருடம் ஆகிவிட்டது. இந்த இரண்டு ஆண்டு காலக்கட்டத்தில் சிரமப்படும் குடும்பங்களுக்கும், ஆதரவற்ற குழந்தைகளுக்கும், கோவிட் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பல உதவிகளை தாம் செய்து வந்துள்ளோம. உதவி தேவைபடுவோர் 016-6565765 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
