
பதினெட்டு வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் காரணத்தால் சிலாங்கூரில் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான சாத்தியத்தை மறுப்பதற்கில்லை என்று மாநில அரசு அறிவித்துள்ளது. தொகுதிகள் அதிகரிப்படுவதற்கு வெளி மாநிலங்களிலிருந்து இங்கு குடியேறியவர்களால் ஏற்பட்ட மக்கள் தொகை அதிகரிப்பும் ஒரு காரணமாகும் என்று ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் தெரிவித்தார். ஓரிடத்திற்கும் மற்றொரு இடத்திற்கும் இடையே உள்ள வாக்கின் மதிப்பு சரிசமமாக இல்லாத சூழல் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு தொகுதிகளுக்கிடையிலான வாக்காளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதில் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்று அவர் சொன்னார்.



