26.4 C
Kuala Lumpur
Tuesday, June 9, 2026

Vetri

29 நாடுகளுக்கு பரவியுள்ளது ஒமிக்ரோன் வைரஸ்! இந்தியாவிலும் இருவருக்கும் பாதிப்பு

🔥 Views : 6
👁 Reading Now : 61

உலகம் முழுவதும் 29 நாடுகளுக்கு ஒமிக்ரோன் வைரஸ் வைரஸ் பரவியுள்ளது என்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் முதன்முறையாக ஒமிக்ரோன் புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த ஓமிக்ரோன் வைரஸ் உலகெங்கும் பீதியை கிளப்பி கொண்டிருக்கிறது.. இதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. இது மிக வீரியமிக்கது என்றும், பன்மடங்கு பெருகும் சக்தி கொண்டது என்றும் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். டெல்டா வைரஸ் போலவே தாக்கத்தை தந்துவிடுமோ என்ற கலக்கமும் உலக மக்களை சூழ்ந்து வருகிறது.. அதனால், பல்வேறு நாடுகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் ஓமிக்ரோன் வைரஸ் பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் 2 பேருக்கு இந்த புதிய ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles