26.4 C
Kuala Lumpur
Tuesday, June 9, 2026

Vetri

சுங்கை சிப்புட் மக்களை வாட்டி வதைக்கும் வெள்ளத்திற்கு தீர்வு காணுங்கள் மாண்புமிகு கேசவன் கோரிக்கை

🔥 Views : 7
👁 Reading Now : 47

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் பல குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தினால் மக்கள் பெரும் அவதி பட்டு வருவதால் இந்த வெள்ளப் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் உறுப்பினர் எஸ். கேசவன் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார். சுங்கை சிப்புட்டில் பிந்தாங், லிந்தாங், தாமான் முகிபா ஜெயா 2 உட்பட பல குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி வெள்ளம் ஏறுவதால் மக்கள் பெரும் துன்பத்தை அனுபவிக்கிறார்கள். நீர் பாசான வடிகால் இலாகா உடனடியாக நடவடிக்கை எடுத்து இங்கு வெள்ளம் ஏற்படாமல் இருக்க உதவி புரிய வேண்டும். இங்குள்ள மக்கள் பலமுறை இந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொண்டு உடனடியாக தீர்வு காண வரும்படி அரசாங்கத்தை மாண்புமிகு கேசவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles