33.9 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

மூவாபாக்காட் நேஷனலை அம்னோ மீறவில்லை பாஸ் கட்சி குற்றச்சாட்டுக்கு அம்னோ பதிலடி

🔥 Views : 9
👁 Reading Now : 23

மூவாபாக்காட் நேஷனல் கூட்டணியில் பெர்சத்து கட்சி இடம் பெற வேண்டும். ஒரு வேளை பெர்சத்து கட்சியை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அம்னோ கூறினால் இந்த கூட்டணியை புறக்கணிக்கும் என்று பாஸ் தலைவர் ஹாடி அவாங் அறிவித்துள்ளது அரசியல் அரங்கில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஸ் கட்சியின் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் பதிலடி தரும் வகையில் அம்மோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் இன்று பதில் கொடுத்துள்ளார். பக்கத்தான் ஹரப்பானை எதிர்க்கும் வகையில் மூவாபாக்காட் நேஷனல் கூட்டணி ஆரம்பிக்கப்பட்டது. அப்போது அதில் அம்னோ மற்றும் பாஸ் கட்சி இடம் பெற்றன. மூவாபாக்காட் நேஷனல் தொடங்கும்போது பெர்சத்து கட்சி பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் இருந்தது. ஆகவே மூவாபாக்காட் நேஷனலை அம்னோ மீறவில்லை என்று அவர் பதில் அளித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles