31.3 C
Kuala Lumpur
Saturday, August 1, 2026

Vetri

தென்னை மரத் தோட்ட விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு கண்டவர் சிலாங்கூர் மந்திரி பெசார்!

🔥 Views : 15
👁 Reading Now : 48

40 ஆண்டுகாலம் போராடி வந்த தென்னை மரத் தோட்ட நிலக்குடியேற்றக்காரர்களின் பிரச்சினைக்கு தீர்வு கண்டவர் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் மற்றும் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் சிவராசா ஆகியோர் பெருமையுடன் குறிப்பிட்டனர்.
சிலாங்கூர் மாநில அரசு பாகுபாடு இல்லாமல் அனைத்து இன மக்களுக்கும் நன்மை தரும் வகையில் உதவிகளை வழங்கி வருகிறது.
2022 சிலாங்கூர் மாநில பட்ஜெட்டில் இந்திய சமுதாயத்திற்கு உற்சாகம் தரும் வகையில் மானியங்களை மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்துள்ளார்.
மேலும் தென்னை மரத் தோட்ட விவசாயிகளின் பிரச்சினையும் தீர்த்து வைத்துள்ளார்.
இதில் நன்மை அடைந்தவர்கள் இந்தியர்கள் அதிகம் என்று சிலாங்கூர் மாநில கெஅடிலான் தீபாவளி கிறிஸ்துமஸ் விருந்து உபசரிப்பில் உரையாற்றும் போது அவர்கள் குறிப்பிட்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles